தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவு....

தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு திமுக ஆதரவளிப்பதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நியாயமான தொகுதி மறுவரையறை (Fair Delimitation) கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
Advertisement
Advertisement
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக Delimitation (தொகுதி மறுவரையறை) சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டு முதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த Delimitation Bill (தொகுதி மறுவரையறை மசோதா) -வை தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே தொகுதி மறுவரையறை நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.