முகப்பு

பஞ்சாபில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ விலகல்: சிரோமணி அகாலிதளத்தில் இணைந்தார்

பஞ்சாபில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ விலகியிருப்பது பற்றி....

36 வினாடிகள் முன்பு
பஞ்சாபில் மேலும் ஒரு ஆம் ஆத்மி எம்எல்ஏ விலகல்: சிரோமணி அகாலிதளத்தில் இணைந்தார்
எம்எல்ஏ சரண்ஜித் சிங்
பகிர்:

பஞ்சாப் பேரவைத் தேர்தலில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு மறுத்ததைத் தொடர்ந்து, சாம்கௌர் சாஹிப் தொகுதி எம்எல்ஏ சரண்ஜித் சிங் ஞாயிற்றுக்கிழமை சிரோமணி அகாலிதளத்தில் இணைந்தார்.

சரண்ஜித் சிங்கை சிரோமணி அகாலிதளத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள பாதல், "மருத்துவத் துறையில் நற்பெயர் கொண்டவர் மருத்துவர் சரண்ஜித். அவருக்கும் அவரது குழுவினருக்கும் அகாலிதளத்தில் உரிய மரியாதையும் பொறுப்பும் வழங்கப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சாம்கௌர் சாஹிப் தொகுதியில் சரண்ஜித் சிங் அகாலிதளத்தின் முக்கிய முகமாக இருப்பார் என்று அக்கட்சியின் தலைவர் என்.கே. சர்மா தெரிவித்தார். கண் மருத்துவ நிபுணரான சரண்ஜித் சிங், கடந்த பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சரண்ஜித் சிங் சன்னியைத் தோற்கடித்து அனைவரையும் வியக்க வைத்தவர்.

Advertisement

Advertisement

ஆம் ஆத்மி கட்சி தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்த நிலையில், எப்படியாவது தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகும் நான்காவது எம்எல்ஏ இவராவார். முன்னதாக, ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, சேதன் சிங் மற்றும் குன்வர் விஜய் பிரதாப் சிங் ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

மேலும், அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவிகளையும் ராஜிநாமா செய்தனர். பஞ்சாபில் வரும் பேரவைத் தேர்தலை பாஜகவும் சிரோமணி அகாலிதளமும் மீண்டும் கூட்டணி அமைத்துச் சந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.