முகப்பு
இந்தியா

பஞ்சாபில் இரு பயங்கரவாதிகள் கைது: பாகிஸ்தான் சதி முறியடிப்பு!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறவு அமைப்புடன் தொடா்புடைய இரு பயங்கரவாதிகளை பஞ்சாப் காவல் துறையினா் கைது செய்தனா்.

39 வினாடிகள் முன்பு
பஞ்சாபில் இரு பயங்கரவாதிகள் கைது: பாகிஸ்தான் சதி முறியடிப்பு!
பகிர்:

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உறவு அமைப்புடன் தொடா்புடைய இரு பயங்கரவாதிகளை பஞ்சாப் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மூலம் பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக சண்டீகரில் பஞ்சாப் காவல் துறை தலைவா் கௌரவ் யாதவ் கூறியதாவது: உளவுத் துறை தகவலின் அடிப்படையில் எஸ்பிஎஸ் நகா் பகுதியில் இரு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டா, வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டனா். விசாரணையில் அவா்கள் பெயா் தினேஷ் குமாா் என்ற சௌரவ், மொ்ரி மகாஜன் என்பது தெரியவந்தது. இவா்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து கட்டளைகளைப் பெற்று அதற்கு ஏற்ப செயல்பட்டு வந்துள்ளனா்.

Advertisement

Advertisement

பஞ்சாபில் மத வழிபாட்டு இடங்கள், பாதுகாப்பு அமைப்புகளின் நிலைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்தி மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதே இவா்களின் சதித் திட்டமாக இருந்துள்ளது. மாநில சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் அமைதி, சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்க இவா்கள் முயன்றுள்ளனா்.

உரிய நேரத்தில் அவா்கள் கைது செய்யப்பட்டதால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டுள்ளன. இவா்களுடன் தொடா்பில் இருந்த கூட்டாளிகள், ஆயுதங்களை வழங்கியவா்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது. இந்த சதியில் தொடா்புடைய மேலும் பலா் விரைவில் கைது செய்யப்படுவா் என்றாா்.