FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரூ. 7,000 கோடி இழப்பீடு? ஏஐ நிறுவனத்துக்கு எதிராக நடிகை வழக்கு!

அனுமதியின்றி புகைப்படங்களைப் பயன்படுத்திய அமெரிக்க நிறுவனத்திடம் நடிகை ஊர்வசி ரௌதல்லா இழப்பீடு கோரியது குறித்து...

பகிர்:

தன்னுடைய புகைப்படங்களை அனுமதியின்றி வணிக நோக்கத்துக்காகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்க நிறுவனத்திடம் நடிகை ஊர்வசி ரௌதல்லா இழப்பீடு கோரியுள்ளார்.

லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் கதைநாயகியாக நடித்திருந்த இந்தி நடிகை ஊர்வசி ரௌதல்லா, தன்னுடைய புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "ஊர்வசியின் அனுமதியின்றி, அவரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி, லாஸ் ஏஞ்சலீஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

மேலும், அந்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது ரூ. 7,000 கோடி இழப்பீடு கோருவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் இழப்பீடு பெறப்படும்.

ஒரு தனிநபரின் அனுமதியின்றி அவரின் அடையாளம், புகைப்படங்கள், விடியோக்களை வணிக நோக்கில் பயன்படுத்துவது சட்டப்படி தவறானது. எங்கள் அனுமதியின்றி, ஊர்வசியின் அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது" என்று கூறியுள்ளனர்.

summary

Actress Urvashi Rautela's team seeks ₹7,000 crore in damages for unauthorised use of her name

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments