இந்திய அரசியலில் ராகுல் பெரும் ஏமாற்றுக்காரர்! பாஜக விமர்சனம்!
எஸ்ஐஆர் விவகாரம் பற்றி பாஜக தலைவர் குற்றச்சாட்டு...
எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக, இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரும் ஏமாற்றுக்காரர் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர், ராகுல் காந்தி மதச்சார்பின்மையையோ அல்லது அரசியலமைப்பையோ பாதுகாப்பவர் அல்ல.. அவர் தனது சொந்தக் குடும்ப நலன்களைப் பாதுகாப்பவர் மட்டுமே.
பிரதமர் நரேந்திர மோடியை தேசத் துரோகி என்று ராகுல் அழைத்தது, மக்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் அவர் மேற்கொள்ளும் போலி மற்றும் உண்மையற்ற அரசியலின் உச்சக்கட்ட அடையாளம் என்று கேரள பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement
புதிய வாக்காளர் பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் படிவம் 6 இணையவழிப் படிவம் "சட்டவிரோதமாக" மாற்றப்பட்டதாகக் கூறிய ராகுல், அந்த மாற்றத்தைச் செய்ய டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்குத் தேர்தல் ஆணையத்தில் யார் உத்தரவிட்டது என்றும், அந்நிறுவனத்தில் யார் அதற்கு ஒப்புதல் அளித்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சந்திரசேகர், இந்திய அரசியலில் ராகுல் காந்தி ஒரு பெரும் ஏமாற்றுக்காரர். எந்தவொரு ஆக்கப்பூர்வமான செயல்திட்டமும் இன்றி, பொய்கள் மற்றும் தவறான தகவல்களை நம்பி அரசியல் நடத்தும் ஒரு உண்மையற்ற அரசியல்வாதிதான் ராகுல் காந்தி என்று கூறினார்.
கதைகளையும் தவறான தகவல்களையும் உருவாக்கும் பாணியை ராகுல் காந்தி கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.