FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் 43-வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் பலி!

தில்லியில் 43வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து இளைஞர் பலியானது பற்றி...

50 வினாடிகள் முன்பு
- Screengrab |X
பகிர்:

தில்லியில் 43வது மாடியில் இருந்து இளைஞர் குதித்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் தில்லியின் நொய்டா செக்டார்-94-ல் உள்ள கட்டடத்தின் 43-வது மாடி அறையின் பால்கனியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், 29 வயது இளைஞர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் விரைந்து சென்ற போலீஸார், பலியானவர் ஹரியாணாவின் மானேசர் பகுதியைச் சேர்ந்த சம்பவ் ஜெயின் என அடையாளம் கண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான விடியோக்கள் கைப்பேசிகளில் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஜெயின் ஒருநாள் தங்குவதற்காக தனியாக வந்திருந்ததாகக் போலீஸார் கண்டறிந்தனர். அவர் கீழே குதித்து பலியாவதற்கு முன், பால்கனியின் தடுப்புச் சுவரில் தொங்கிக்கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

காவல் அதிகாரிகளும் தடயவியல் குழுவினரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, தேவையான ஆதாரங்களைச் சேகரித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக அதிகாரி கூறினார். பலியானவர் மன அழுத்தத்தில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளின்படி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

summary

Sambhav Jain, a Manesar resident, had checked in alone for a one-day stay; police are reviewing CCTV footage and other evidence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments