FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளது குறித்து...

பாலியல் சீண்டல். - பிரதிப் படம்
பகிர்:

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக புகார் அளித்துள்ளனர்.

தில்லியின் ஜந்தர் மந்தரில் நேற்று (அக். 3) நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​காவல்துறையினரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக மூன்று பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த அக். 2 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பேரணியாகச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, அக். 3 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் தங்களை தவறான முறையில் தொட்டதாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் பெண் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் விடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, அந்த 3 பத்திரிகையாளர்களும் காவல்துறையில் முறையாக புகார் அளித்தனர். இந்த நிலையில், நியாயமான விசாரணைக்காக மாவட்ட காவல்துறையிடமிருந்த அந்தப் புகாரானது தில்லி குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறையின் இந்தக் கடுமையான செயலுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் போன்றவை கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Three female journalists have lodged complaints alleging sexual harassment during a protest held at Jantar Mantar in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments