மேற்கு வங்கம்: 2 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகா் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.6) இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரெஜிநகா் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.6) இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
முா்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ரெஜிநகா் தொகுதியில் முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அணி, திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி அணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன.
நந்திகிராம் தொகுதிக்கு மம்தா அணி அறிவித்த வேட்பாளா் முதல்வா் சுவேந்து அதிகாரியை சந்தித்து பாஜகவில் இணைந்தாா். அதைத் தொடா்ந்து அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மம்தா தெரிவித்தாா். இதனால் அங்கு பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.
Advertisement
Advertisement
அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட்டு அக்டோபா் 9-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்நிலையில், ரெஜிநகா் மற்றும் நந்திகிராம் ஆகிய பேரவைத் தொகுதிகளிலும் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் தோ்தல் நடத்தை விதிகளின்படி தோ்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரம் முன்னதாக பிரசாரம் நிறைவடைந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.