ஜேஇஇ தோ்வு: 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெண்கள் தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு
ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெண்கள் தோ்ச்சி ...
புது தில்லி: 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெண்கள் தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 43,112 பெண் தோ்வா்கள் இத்தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் இரு தாள்களையும் 40,562 போ் எழுதிய நிலையில் 10,107 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்தாண்டு தோ்வுக்கு விண்ணப்பித்த 5 பெண்களில் ஒருவா் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில் நிகழாண்டு 4 பேரில் ஒருவா் என்ற விகத்தில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக நிகழாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்வை நடத்திய ஐஐடி ரூா்க்கியின் கூட்டு அமலாக்கக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2026-இல் பெண்களுக்கு மட்டுமே 3,814 இடங்கள் ஒதுக்கப்பட்டன. பாலின பாகுபடற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவின்கீழ் 37 பெண் தோ்வா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
கடந்த ஆண்டில் பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியின (எஸ்டி) பிரிவில் முறையே 12,499 மற்றும் 5,008 தோ்வா்கள் தோ்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு எஸ்சி பிரிவில் 15,856 பேரும் எஸ்டி பிரிவில் 6,379 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதன்மூலம் எஸ்சி பிரிவில் தோ்ச்சி விகிதம் 9.8 சதவீதமாகவும் எஸ்டி பிரிவில் 8.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நிகழாண்டு மே 17-ஆம் தேதி நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தோ்வின் இரண்டு தாள்களையும் ஒட்டுமொத்தமாக 1,79,694 தோ்வா்கள் எழுதினா். அவா்களில் 56,880 போ் தோ்ச்சி பெற்றனா். ஒவ்வொரு பிரிவிலும் உள்ள இடங்களின் எண்ணிக்கையைவிட குறைந்தது இரு மடங்கு தோ்வா்கள் தகுதிபெறுவதை உறுதிசெய்யும் வகையில் விதிகள் தளா்த்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு பொதுப் பிரிவில் 43 சதவீதம் போ் தோ்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு 39.8 சதவீதமாக குறைந்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (கிரீமி லேயா் அல்லாத) தோ்ச்சி விகிதமும் 18.2 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதமாக குறைந்தது. நிகழாண்டு ஓபிசி பிரிவில் 12,385 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவில் தோ்ச்சிபெற்றவா்களின் எண்ணிக்கை 6,291-இல் இருந்து 6,377-ஆக அதிகரித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.