FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் கைது!

தில்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் அளித்த பெண் கைது செய்யப்பட்டது பற்றி...

தில்லி காவல் அதிகாரி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி போராடிய பத்திரிகையாளர்கள் கைது - X | ANI
பகிர்:

தில்லியில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின்போது, பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக காவல்துறை உதவி ஆணையர் மீது புகார் அளித்த பெண் பத்திரிகையாளர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த அக். 2 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பேரணியாகச் சென்றனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அக். 3 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி உதவி ஆணையர் விவேக் பாகத், தங்களை தவறான முறையில் தொட்டதாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் பெண் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் விடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், காவல் உதவி ஆணையருக்கு எதிராக புகார் அளித்த பெண் மற்றும் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி போராடிய 17 பேரை தில்லி காவல்துறையினர் இன்று கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக சிஜேபி சட்டப்பிரிவுத் தலைவர் ரத்னா சிங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், இதுதொடர்பாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணே தன்னிடம் தெரிவித்ததாகவும், தங்கள் துறையைச் சேர்ந்த ஒருவரைக் காப்பாற்றிக்கொள்ள, பாதிக்கப்பட்ட பெண்ணையும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோருபவர்களையும் காவல்துறையினர் தாக்குகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மற்றவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவும், அவர்களின் அலைபேசிகளைப் பறிமுதல் செய்யவும் தில்லி காவல்துறை பரிசீலித்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் சீண்டல் போன்ற கடுமையான குற்றங்கள் குறித்த புகாருடன் ஒரு பெண் அணுகும் போது, கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பிறகே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டம் தெளிவாக சொல்கிறது” என்று ரத்னா சிங் பதிவிட்டுள்ளார்.

summary

Woman who filed sexual harassment complaint against Delhi police officer arrested!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments