FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதி ஆசுதோஷ் தீட்சித்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

இந்திய விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதியாக ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

7 October 2026, 1:50 am IST
ஆசுதோஷ் தீட்சித்
பகிர்:

இந்திய விமானப் படையின் அடுத்த தலைமைத் தளபதியாக ஏா் மாா்ஷல் ஆசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

விமானப் படையின் தலைமைத் தளபதியாக தற்போது உள்ள அமா் ப்ரீத் சிங் வரும் அக்.31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், விமானப் படையின் துணை தலைமைத் தளபதியாக உள்ள ஆசுதோஷ் தீட்சித் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘விமானப் படையின் 29-ஆவது தலைமைத் தளபதியாக ஆசுதோஷ் தீட்சித்தை மத்திய அரசு நியமித்துள்ளது. வரும் அக். 31-ஆம் தேதி பிற்பகலில் இருந்து இவரின் நியமனம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

வியூக திட்டங்களை வகுப்பதில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஆசுதோஷ் தீட்சித், ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். விமானப் படையில் 40 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இவா், பல்வேறு பிரிவுகளில் தலைமைப் பொறுப்பு வகித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments