தடையை மீறி அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் நுழைந்த ராகுல், பிரியங்கா!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணி....
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் தடையை மீறி அகில இந்தியா வானொலி அலுவலகத்துக்குள் நுழைந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி நுழைந்தனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் இன்று தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணிக்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் நீதி ஆயோக் அலுவலகத்திற்கு முன்னே அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
Advertisement
Advertisement
இதையடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேர்தல் ஆணைய அலுவலகத்தை அடையும் நோக்கில், காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் சில ஆதரவாளர்களுடன் அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் (ஆகாஷ்வானி பவன்) நுழைந்தனர்.
அங்கே ஞானேஷ் குமாருக்கு எதிராக ராகுல், பிரியங்கா தங்களது ஆதரவாளர்களுடன் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் அங்கிருந்து தேர்தல் ஆணையம் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
Delhi protest: Congress MPs Rahul Gandhi and Priyanka Gandhi sitting inside Akashvani Bhawan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.