FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஞானேஷ் குமார் விவகாரம்: தில்லியில் தேர்தல் ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி!

ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி....

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் - ANI
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி அவர்கள் பேரணியாகச் செல்லவிருக்கின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில் தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக அவர்கள் பதாகைகளுடன் கோஷம் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து அவர்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் நாடாளுமன்ற வளாகத்திலும் தேர்தல் ஆணையம் முன்பாகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தில்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

summary

INDIA bloc MPs, who are set to march to the Election Commission of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments