FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலருக்கு பதவி உயர்வு?

பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது குறித்து...

விவேக் பாகத். - linkedin
பகிர்:

பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளில் சட்டவிரோதமான முறையில் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

ஞானேஷ் குமாருக்கு எதிராக கடந்த அக். 2 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரை நோக்கி ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பேரணியாகச் சென்றனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, அக். 3 ஆம் தேதி தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆணையர் (ACP) விவேக் பாகத், தங்களை தவறான முறையில் தொட்டதாகவும், அநாகரீகமாக நடந்துகொண்டதாகவும் பெண் பத்திரிகையாளர்கள் சமூக ஊடகங்களில் விடியோ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, அந்தப் புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி போராடிய பெண் பத்திரிகையாளர் உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் நேற்று (அக். 5) கைது செய்தனர்.

இந்த நிலையில், தில்லியில் 12 காவல்துறை அதிகாரிகள் நேற்று தற்காலிக கூடுதல் துணை ஆணையர் (டிசிபி) பதவிக்கு உயர்த்தப்பட்டனர். அதில் பாலியல் குற்றம் சாட்டப்பட்ட விவேக் பாகத் பெயரும் இடம் பெற்றிருந்தது.

பாலியல் புகார் நிலுவையில் உள்ளபோது பதவி உயர்வு வழங்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும், பத்திரிகையாளர் சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்தன.

எனவே, விவேக் பாகத் தாமாக முன்வந்து தன்னுடைய பதவி உயர்வை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்தார். அதனால், அவருடைய பதவி உயர்வை தில்லி அரசு நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

A police officer who engaged in sexual harassment of female journalist was promoted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments