முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற நெல்லை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை! எஸ்.ஐ. கைது
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்குச் சென்ற நெல்லை பெண் காவலருக்கு பாலியல் தொல்லை புகாரில் எஸ்ஐ கைது...
பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சக காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் விஜய் கடந்த நவ. 2 ஆம் தேதி புதுக்கோட்டையில் பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணிக்கு நெல்லையில் இருந்து 20 பேர் சென்றுள்ளனர். பணி முடிந்து இரவு வேனில் அங்கிருந்து நெல்லைக்குத் திரும்பிய போது வேனில் வைத்தே சிறப்பு எஸ்.ஐ. குமார் என்பவர் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
Advertisement
Advertisement
உடனே பெண் காவலர், அவரை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சிறப்பு எஸ்.ஐ. குமாரும் போதையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
நெல்லை திரும்பியதும் அந்த பெண் காவலர், பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே சக பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.