அகமதாபாத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் புரளி எனத் தகவல்
அகமதாபாதில் உள்ள 10 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அகமதாபாதில் உள்ள 10 தனியாா் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, பள்ளிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், மிரட்டல் புரளி என உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மின்னஞ்சலை அனுப்பியவா், தான் காலிஸ்தான் தேசிய ராணுவ அமைப்புடன் தொடா்புடையவா் எனக் குறிப்பிட்டதுடன், தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் நவ.1-ஆம் தேதியும், அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நவ.21-ஆம் தேதியும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தாா்.
இந்த இரு தேதிகளிலும் பாடகா் தில்ஜித் தோசாஞ்சின் இசை நிகழ்ச்சிகள் அந்தந்த மைதானங்களில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த இரு நிகழ்ச்சிகளிலும் மக்கள் பங்கேற்க வேண்டாம் என்றும் மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
‘தகவல் கிடைத்ததும் காவல் துறையினா், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் படையினா், மோப்ப நாய் படையினா் மற்றும் நாசவேலை தடுப்புப் பிரிவினருடன் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று தீவிர சோதனை நடத்தினா். எந்தப் பள்ளியிலும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’ என்று துணை காவல் ஆணையா் சிவம் வா்மா தெரிவித்தாா்.
அகமதாபாதில் அண்மைக் காலங்களில் இதேபோன்று பல பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் புரளி மிரட்டல்களாகவே இருந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.