ஃப்ளைதுபை கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தலையில் எலும்பு முறிவு!
ஃப்ளைதுபை கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டது பற்றி...
ஃப்ளைதுபை விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய துணை விமானியான ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி,, விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
படுகாயங்களுடன் எதிா்த்துப் போராடிய மச்சாா், சக பயணிகள் - ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்து, விமானத்தில் பயணித்த இரு விமானிகளின் உதவியுடன் செளதி அரேபியாவில், 150 பயணிகளுடன் சென்ற விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மச்சாருக்கு செளதி அரேபியா மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
இந்த நிலையில், விமானத்தில் நடந்த சம்பவத்தில் மச்சாரின் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்காக, ஐக்கிய அரபு அமீரக மருத்துவமனைக்கு மச்சாரை மாற்றுவதற்கு முன்னதாகவே, செளதி அரேபியா மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“கேப்டன் ஸ்மித் மிச்சார் உடல்நலம் தேறி வருகிறார். அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் வழங்கி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
Flydubai Captain Smith Machar suffers a skull fracture!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.