FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பு?

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமலாக்கம் ஒத்திவைக்கவுள்ளதாக தகவல்...

8 அக்டோபர் 2026, 11:09 am IST
பிரதிப் படம்
பகிர்:

யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை பண்டிகை காலம் முடியும் வரை ஒத்திவைக்க இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் யுபிஐ அல்லது டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு 0.4 சதவிகிதம் எம்டிஆா் வசூலிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்திருந்தது.

அதன்படி, ரூ. 2000க்கும் மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது 0.4 சதவிகிதம் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் ரூ. 3000 பொருள் அல்லது சேவை பெறும்போது, அந்தத் தொகை யுபிஐ மூலம் செலுத்தினால், அதற்கு வணிகர் ரூ. 12 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டியது வரும். ஒரு வேளை ரூ. 50 ஆயிரத்துக்கு பொருள்கள் வாங்கினால் அதற்கு வணிகர் ரூ. 200 கட்டணமாக செலுத்துவார். ரூ. 75,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவா்த்தனைகளுக்கு ரூ. 300 உச்சவரம்பு கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த புதிய நடைமுறை வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, ஆயுதப்பூஜை, தசரா, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்தால், பெருமளவில் இழப்பு ஏற்படும் என்று வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே, விலைவாசி உயர்வு, பணவீக்கம் போன்றவற்றால் நாடு முழுவதும் வழக்கமான வணிகம் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் சூழலில், பண்டிகை காலம் முடியும் வரை யுபிஐ கட்டண முறையை ஒத்திவைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 2027 வரை யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை ஒத்திவைப்பது குறித்து இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் பரிசீலித்து வருவதாக ’மணி கண்ட்ரோல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், ஓரிரு நாள்களில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அமலாக்கம் ஒத்திவைப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Charges for UPI transactions: Implementation deferred?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments