டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் மோடி
இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வின் 10-வது பதிப்பை தொடங்கிவைத்து பிரதமர் பேசியது..
தில்லியில் உள்ள யஷோபூமி வளாகத்தில் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வின் 10-வது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது..
டிஜிட்டல் மோசடிகளைக் கட்டுப்படுத்த அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
Advertisement
Advertisement
சைபர் மோசடிகள், டீப்ஃபேக்( deepfake) தொழில்நுட்பம் சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகளாவிய கட்டமைப்பு அவசியம்.
உலகெங்கிலும் உள்ள ஜிஎஸ்எம்ஏ மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய மோசடிகள் மக்களைச் சென்றடைவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையிலான உலகளாவிய கட்டமைப்பை நாம் உருவாக்க வேண்டும்.
இத்துறையில் இந்தியா தனது அனுபவங்களிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டுள்ளது. மேலும், அந்த அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்துகொள்ள இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. தொழில்நுட்பம் மக்களின் நம்பிக்கையைப் பெறும்போது மட்டுமே அது பரவலான பயன்பாட்டை எட்ட முடியும்.
இந்தியாவில் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. டிஜிடடல் விழிப்புணர்வின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் காரணமாகவே, குழந்தைகள் தொடர்ந்து கற்கவும், மக்கள் தொடர்பில் இருக்கவும், தொலைதூரப் பணிகள் சாத்தியமாக்கவும் முந்தது.
போலி பயனர்கள் மோசடி செய்திகள் மற்றும் பிற இணைய அச்சுறுத்தல்கள் குறித்து மக்கள் அதிக விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். கடந்த 10-12 ஆண்டுகளில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.