பினராயி விஜயன் குடும்பத்துக்கு எதிராக எப்.ஐ.ஆர்! கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சிஎம்ஆர்எல் லஞ்ச விவகாரம் தொடர்பாக பினராயி விஜயனுக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..
சிஎம்ஆர்எல் லஞ்ச விவகாரம் தொடர்பான அமலாக்கத் துறையின் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை அறிக்கையின் அடிப்படையில், பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுக்கு பின்னடைவு
எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த காங்கிரஸ் (யுடிஃஎப்) அரசின் முடிவை நீதிமன்றம் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது.
Advertisement
Advertisement
சிபிஐ(எம்) எதிர்ப்பு
இது பினராயி விஜயனுக்கு எதிரான அரசியல் சதி என்றும், மத்திய அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறி, இதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம் என சிபிஐ(எம்) அறிவித்துள்ளது. பாஜக தலைவர்களோ பினராயி விஜயன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குற்றச்சாட்டு பின்னணி
எக்ஸாலஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு சிஎம்ஆர்எல் நிறுவனம் ஐடி ஆலோசனை சேவை என்ற பெயரில் ரூ. 2.78 கோடியை முறைகேடாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.