FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் மூத்த தலைவர்கள் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் போராட்டம் நடத்திய சிபிஎம் மூத்த தலைவர்கள் கைது...

சிபிஐஎம் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி கைது - CPIM Tamilnadu
பகிர்:

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிபிஎம் மூத்த தலைவர்கள் பிரிந்தா காரத், ஷைலஜா, ஜான் பிரிட்டாஸ் எம்.பி., பினராயி விஜயன் ஆகியோர் கைதாகியுள்ளனர்.

Advertisement

Advertisement

அதேபோல, மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கே. பாலகிருஷ்ணன், மாணிக் சர்க்கார், ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் காவல்துறை வாகனத்தில் பல மணி நேரம் சுற்றப்பட்டு தற்போது புராரி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சிபிஎம் தகவல் தெரிவித்துள்ளது.

சிபிஐஎம் பொதுச் செயலாளர் எம். ஏ. பேபி, மத்தியக் குழு உறுப்பினர்‌ ஷைலஜா உள்ளிட்டோர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.

"வாக்குரிமையை பாதுகாப்பதற்காக அனைத்து தடைகளையும் மீறி போராட்டக் களத்திற்கு வந்துள்ளோம். ஆனால் தில்லி காவல்துறை குற்றவாளிகளை போல எங்களை கைது செய்துள்ளது. வாக்குரிமைக்காக போராடுவதை ஒரு குற்றமாக்கும் இடத்திற்கு இந்தியாவை அழைத்து வந்துள்ளார்கள். ஆனால், அனைத்து தடைகளையும் உடைத்து நொறுக்குவோம்" என்று கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

summary

CPIM Leaders arrested in Delhi jantar mantar for protesting against Gyanesh kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments