FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தில்லியில் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் பேரணி! மாணவர்கள், ஆர்வலர்கள் கைது!

தில்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு எதிராகப் பேரணி நடத்திய மாணவர்கள், ஆர்வலர்கள் கைது...

37 வினாடிகள் முன்பு
ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஆர்வலரைக் கைது செய்யும் போலீஸார்... - PTI
பகிர்:

தில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிராக தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி இன்று (அக். 23) நடைபெற்ற போராட்டப் பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

தில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தபால் நிலையம் அமைந்துள்ள கோலே டக் கானா பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியில், கையில் தேசியக் கொடியை ஏந்தியும், ஞானேஷ் குமார் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டக்காரர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணியில், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கராத் மற்றும் ஏராளமான மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள், உத்தரப் பிரதேசம், ஹரியாணா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றடைவதற்கு முன்னதாகவே பேரணியாகச் சென்ற மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

மேலும், மத்திய தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில், பிஎன்எஸ் சட்டப்பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி, அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் ஏராளமான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

In Delhi, police have arrested students and activists who were marching demanding the resignation of CEC Gyanesh Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments