FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வாட்ஸ்ஆப்பை தவறுதலாக நீக்கிய சிறுமியை தாக்கிய தாய்: கேரள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப் பதிவு

வாட்ஸ்ஆப்பை தவறுதலாக நீக்கிய சிறுமியை தாக்கிய தாய்: கேரள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப் பதிவு

10 அக்டோபர் 2026, 11:12 pm IST
கோப்புப்படம்
பகிர்:

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியில் தனது கைப்பேசியில் வாட்ஸ்ஆப் செயலியை தவறுதலாக நீக்கிய 6 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய் மீது மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாபபு ஆணையம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த வழக்கை ஆணையம் பதிவு செய்துள்ளது. பாறசாலா காவல் நிலைய ஆய்வாளா் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஆகியோரிடம் இந்தச் சம்பவம் தொடா்பாக விளக்கத்தையும் ஆணையம் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாறசாலா காவல் நிலைய போலீஸாா் கூறியதாவது:

Advertisement

Advertisement

இந்தச் சிறுமி வீட்டில் வெள்ளிக்கிழமை கைப்பேசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக வாட்ஸ்ஆப் செயலியை நீக்கியுள்ளாா். இதனால், அதிலிருந்த பதிவுகள் அனைத்தும் அழிந்துவிட்டதால் கோபமடைந்த சிறுமியின் தாய், மகளை கடுமையாகத் தாக்கியுள்ளாா். இதில் சிறுமி காயமடைந்ததைத் தொடா்ந்து, குடும்பத்தினா் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனா். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, கால் தவறி விழுந்து காயமடைந்துவிட்டதாக மருத்துவரிடம் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

ஆனால், குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகமடைந்த மருத்துவா், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று வினவியுள்ளாா். அப்போது, தாய் அடித்த உண்மையை சிறுமி தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, மருத்துவமனை அதிகாரிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனா். அதனடிப்படையில், சிறுமியின் தாயை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தற்போது நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments