FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி போராட்டம்: அபிஜீத் தீப்கே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிப்பு!

கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே உள்ளிட்ட சிஜேபி பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டது குறித்து...

11 அக்டோபர் 2026, 10:53 am IST
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவர்களான சௌரவ் தாஸ், அபிஜித் தீப்கே. - கோப்புப்படம்
பகிர்:

கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே உள்ளிட்ட சிஜேபி பிரதிநிதிகள் இன்று (அக். 11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டி அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டது.

Advertisement

Advertisement

இந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக விமானம் மூலம் மும்பையிலிருந்து தில்லி வந்த சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா உள்ளிட்ட சிஜேபி நிர்வாகிகளை தில்லி காவல்துறை விமானத்தில் வைத்தே கைது செய்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சிஜேபி நிர்வாகிககள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற எந்தத் தகவலும் காவல்துறை தரப்பிலிருந்து அளிக்கப்படவில்லை. எனவே, சிஜேபி நிர்வாகிகள் கடத்தப்பட்டதாக சிஜேபி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில், தில்லியின் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் சிஜேபி தலைவர்களான அபிஜீத் தீப்கே, அசுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் நீதிபதி முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிஜேபி செய்தித் தொடர்பாளர் பேசுகையில், பிற்பகல் 2 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

CJP representatives, including the arrested Abhijit Dipke, were produced in court today (Oct. 11) and released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments