FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாட்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை: தில்லி போலீஸார் மீது தீப்கே குடும்பத்தினர் குற்றச்சாட்டு

தில்லி போலீஸாரால் பாட்டியின் இறுதிச்சடங்கில் தீப்கே பங்கேற்க முடியவில்லை என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியிருப்பது பற்றி...

39 வினாடிகள் முன்பு
விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே - படம் - எக்ஸ்
பகிர்:

சிஜேபி ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் தீப்கே தனது பாட்டியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் தில்லி போலீஸார் அவரை விடுவிக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளனர்.

அபிஜீத் தீப்கே தந்தையின் தாயாரான சாவித்ரிபாய் சங்கர்ராவ் திப்கே (85), நீண்ட நாள் உடல்நலக்குறைவு காரணமாக மகாராஷ்டிரத்தின் ஹின்கோலி மாவட்டத்தில் சனிக்கிழமை காலமானார். அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன.

ஆனால் இதில் தீப்கேவால் பங்கேற்க முடியவில்லை. இறுதிச்சடங்கிற்கு முன்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய குடும்ப உறுப்பினர் ஒருவர், பாட்டி இறந்த செய்தி அறிந்ததும் அபிஜித்தை விடுவிக்குமாறு தில்லி போலீஸாரிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தோம்.

Advertisement

Advertisement

ஆனால் அவர்கள் அவரை விடுவிக்கவில்லை என்று தெரிவித்தார். தீப்கே இன்று விடுவிக்கப்பட்டாலும், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத அளவுக்குத் தாமதமாகிவிட்டது என்று மற்றொரு உறவினரான விலாஸ் தீப்கே கூறினார்.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி(சிஜேபி) சார்பாக நடத்தவிருந்த போராட்டத்திற்கு முன்னதாக, தீப்கே மற்றும் கட்சியின் நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை தில்லி போலீஸார் சனிக்கிழமை தடுப்புக் காவலில் வைத்தது.

பின்னர் மூவரும் ஞாயிற்றுக்கிழமை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்குப் பங்கம் விளைவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

summary

The family of Cockroach Janta Party (CJP) convenor Abhijeet Dipke on Sunday alleged that the Delhi Police did not release him despite repeated pleas so he could attend his grandmother's funeral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments