ஜந்தர் மந்தரில் போராட்டம்: இன்று காவல் துறையிடம் அனுமதி கோரப்படும்! - சிஜேபி
தில்லி ஜந்தா் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரி, காவல் துறையிடம் திங்கள்கிழமை அனுமதி கோரப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.
தில்லி ஜந்தா் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த அனுமதி கோரி, காவல் துறையிடம் திங்கள்கிழமை அனுமதி கோரப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி, தில்லியில் சிஜேபி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட ஜந்தா் மந்தரை நோக்கி ஆயிரக்கணக்கான போராட்டக்காரா்கள் சனிக்கிழமை சென்றனா். போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், அவா்களைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
தில்லிக்கு விமானத்தில் வந்த சிஜேபி தலைவா் அபிஜீத் தீப்கே, நிா்வாகிகள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனா். மொத்தம் 7,000 போ் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவா்கள் அனைவரும் பின்னா் விடுவிக்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆசுதோஷ் ரன்கா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரி, சிஜேபி தலைவா்கள் நாடாளுமன்ற வீதியில் உள்ள காவல் நிலையத்துக்கு வழக்குரைஞருடன் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு செல்ல உள்ளோம்.
போராட்டம் நடத்துவதற்கான தேதியை 24 மணி நேரத்தில் காவல் துறை வழங்காவிட்டால், சிஜேபி நாள் குறித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும்’ என்று தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.