FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கேரளத்தில் காட்டுப்பன்றி தாக்குதல்: பெண் பலி, 3 பேர் காயம்

கேரளத்தில் காட்டுப்பன்றி தாக்கி பெண் பலியானது பற்றி...

11 அக்டோபர் 2026, 12:18 pm IST
காட்டுப்பன்றி
பகிர்:

கேரளத்தில் காட்டுப்பன்றி தாக்குதலில் பெண் பலியான நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.

கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை காட்டுப்பன்றி தாக்குதலில் பெண் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர். பலியானவர் இடவன்னாவைச் சேர்ந்த கிழக்கு சாத்தலூரைச் சேர்ந்த பி.கே. பாத்திமா (60) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் முகமது அலி, ஹமீத் மற்றும் வி.பி. அப்துல்லா ஆகியோர் ஆவர்.

அதிகாலை தொழுகைக்காக ஒரு குழுவினர் மத வழிபாட்டுத் தலத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​காட்டுப்பன்றிக் கூட்டத்தை எதிர்கொண்டனர். அப்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முன்னால் நடந்து சென்றுகொண்டிருந்த பாத்திமா மற்றும் அலி ஆகியோர் முதலில் தாக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

அதைத் தொடர்ந்து காட்டுப்பன்றிகள் மற்றவர்கள் மீதும் பாய்ந்து தாக்கின என்று போலீஸார் கூறினர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாத்திமா பலியானார் என்று போலீஸார் தெரிவித்தனர். மற்ற மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார்கள் என்று போலீஸார் கூறினர். இப்பகுதியில் காட்டுப்பன்றிகள் அடிக்கடி தென்படுவதாகவும், பயிர்களை அவை சேதப்படுத்துவது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

summary

An elderly woman died, and three others sustained injuries in a wild boar attack here on Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments