FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள்: தில்லியின் 6 முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடல்

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டத்தை முன்னிட்டு தில்லி மெட்ரோவின் ஆறு முக்கி நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளது குறித்து...

12 அக்டோபர் 2026, 10:53 am IST
தில்லியின் 6 முக்கிய மெட்ரோ நிலையங்கள் மூடல் - PTI
பகிர்:

புது தில்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள போராட்டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி தில்லி மெட்ரோவின் சென்ட்ரல் செக்ரடேரியட், ராஜீவ் சௌக் மற்றும் படேல் சௌக் உள்ளிட்ட ஆறு முக்கிய நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் திங்கள்கிழமை(அக்.12) மாலை 4 மணி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜன்பத், மண்டி ஹவுஸ், பாரகம்பா சாலை, சென்ட்ரல் செக்ரடேரியட், ராஜீவ் சௌக் மற்றும் படேல் சௌக் ஆகிய நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வசதிகள் மூடப்பட்டிருக்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட அனைத்து நிலையங்களிலும் வழித்தடங்களை மாற்றிக்கொள்ளும் வசதி தொடர்ந்து செயல்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் கழகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

பாதுகாப்பு அமைப்புகள் நிலைமையை ஆய்வு செய்து, அதற்கேற்ப தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் வழித்தடங்களை மாற்றிக்கொள்ளும் வசதி தொடர்ந்து செயல்படும் என்றும் கூறியுள்ளது.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக தலைநகரில் இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), ஆம் ஆத்மி கட்சி, இடதுசாரி மாணவா் அமைப்புகள் உள்ளிட்ட மாணவா் அமைப்புகல் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், தில்லியில் அமைதி வழியில் போராடுவதற்காக ஒன்று கூடுவோரை சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கக் கூடாது என்றும், தில்லி மெட்ரோ மற்றும் இணைய சேவைகளை மீண்டும் சீரடையச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Delhi Metro shuts entry, exit at six stations ahead of Congress' protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments