முகப்பு

வாக்குத் திருட்டு!! காங்கிரஸ் கட்சி நாளை நாடு தழுவிய போராட்டம்!

வாக்குத் திருட்டுக்கு எதிராக நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்துவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது...

8 வினாடிகள் முன்பு
வாக்குத் திருட்டு!! காங்கிரஸ் கட்சி நாளை நாடு தழுவிய போராட்டம்!
வாக்குத் திருட்டு குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்தபோது... - PTI
பகிர்:

வாக்குத் திருட்டுக்கு எதிராக வரும் வியாழக்கிழமை (நவ. 26) நாடு தழுவிய போராட்டப் பேரணிகளை நடத்தவுள்ளதாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றது. இதையடுத்து, அரசியலமைப்பு நாளை முன்னிட்டு வரும் வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டப் பேரணிகளை நடத்த காங்கிரஸ் கட்சித் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வாக்குத் திருட்டுக்கு எதிராக, காங்கிரஸ் கமிட்டி தலைமையில் நாளை பேரணி நடத்தப்படும் என்றும், இந்தப் பேரணிகள் சட்டமேதை அம்பேத்கர் அல்லது மகாத்மா காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் இன்று (நவ. 25) அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், லக்னொ நகரத்தில் நடைபெறும் பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி, கே.சி. வேணுகோபால் கூறுகையில்,

“பிகார் தேர்தல்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்கியது. இரண்டாம் கட்ட எஸ்ஐஆர் நடவடிக்கைகள் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரிவடைந்தன. தற்போது மூன்றாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் நடைபெறவுள்ளன.

பிகாரில் மட்டும் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. மூன்று கட்டங்களான எஸ்ஐஆர் பணிகள் மூலம் நாட்டில் 13 கோடிக்கும் அதிகமானோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.

ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய வாக்குரிமையைப் பாதுகாப்பது காங்கிரஸ் கட்சியின் கடமை” எனக் கூறியுள்ளார்.

summary

The Congress party has announced that it will hold nationwide protest marches this coming Thursday (Nov. 26) against the theft of votes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.