உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!
உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி செல்வது பற்றி...
‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு தொடா்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வதற்காக இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேரணியாக சென்று கொண்டுள்ளனர்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்ஐஆா்) மூலம் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும்; அவா் எடுத்த அனைத்து முடிவுகள் குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.
Advertisement
Advertisement
கடந்த வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்த இண்டி கூட்டணி தலைவா்கள், ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டு குறித்து எடுத்துரைத்தனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான தங்களின் கவலைகளையும் அவா்கள் முன்வைத்தனா்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் எம்.பி.க்களும் இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று, தலைமை நீதிபதியைச் சந்தித்து ஞானேஷ் குமாரை நேரில் சந்தித்து புகார் அளிக்க திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக தலைமை நீதிபதியிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கடிதம் எழுதியிருந்தனர்.
ஆனால், வாக்குத் திருட்டு தொடர்பான விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், அதுதொடர்பாக சந்திப்பு நடத்துவது பொருத்தமற்றதாக இருக்கும், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களும் எம்.பி.க்களும் தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்துக்குள் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 10 தலைவர்கள் சென்று, வாக்குத் திருட்டு தொடர்பாக ஞானேஷ் குமாருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
INDIA bloc MPs march towards the Supreme Court!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.