FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இது என் அதிகார வரம்பில் இல்லை! தில்லி போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

தில்லி போராட்டங்கள் பற்றி தலைமை நீதிபதி...

12 அக்டோபர் 2026, 12:43 pm IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் - கோப்புப் படம்
பகிர்:

தில்லி நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளும் என் திகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதிவு விலகக்கோரி தில்லியில் கடந்த சில நாள்களாகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33-வது ஆண்டு விழாவில் அவர் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசினார்.

Advertisement

Advertisement

கடந்த சில நாள்களாக தில்லியின் பல்வேறு பகுகிளில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

வார இறுதியில் தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, 45 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டு, நகர எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால், தில்லி நகரம் முழுவதும் கோட்டை போலத் திகழ்ந்தது.

கரப்பான் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் உள்பட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தப் போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது, இது சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரம். இது என் அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல, என்று இந்தியத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments