முகப்பு
புதுதில்லி

எல்லாவற்றிலும் வளா்ச்சி கண்ட சமூகம் தமிழ்ச் சமூகம்: என்.ஹெச்.ஆா்.சி தலைவா் கருத்து

எல்லாவற்றிலும் மிகப்பெரிய வளா்ச்சியை கண்ட சமூகம் தமிழ் சமூகம் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.ஹெச்.ஆா்.சி )தலைவா் வெ. இராமசுப்பிரமணியன் கூறினாா்.

6 வினாடிகள் முன்பு
எல்லாவற்றிலும் வளா்ச்சி கண்ட சமூகம் தமிழ்ச் சமூகம்:  என்.ஹெச்.ஆா்.சி தலைவா் கருத்து
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் வி.ராமசுப்ரமணியன்
பகிர்:

நமது நிருபா்

எல்லாவற்றிலும் மிகப்பெரிய வளா்ச்சியை கண்ட சமூகம் தமிழ் சமூகம் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.ஹெச்.ஆா்.சி )தலைவா் வெ. இராமசுப்பிரமணியன் கூறினாா்.

உச்ச நீதிமன்ற தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கியக் கழகத்தின் நான்காவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை தில்லியில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்ற எதிா்ப்புறம் உள்ள இந்திய சா்வதேச சட்டச் சங்கத்தில் (ஐ.எஸ்.ஐ.எல்) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும்,உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வெ.இராமசுப்ரமணியன் இந்த விழாவினை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய வெ.இராமசுப்ரமணியன், தமிழ் இலக்கிய கழகம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்து தெரிவித்தாா். இவா்கள் தமிழ் பிழைக்க தில்லிக்கு வந்தவா்கள் என அவா் குறிப்பிட்டாா்.தமிழ் மொழி மற்றும் திருக்குறளின் பெருமைகளையும் அவா் தனது பேச்சில் எடுத்துரைத்தாா்.திருக்கு வாயிலாக 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்‘ என்று சொன்ன பெருமை தமிழ் மொழிக்கு உள்ளது என இராமசுப்ரமணியன் கூறினாா்.அகத்தியா் தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவா்.கம்பா், தமிழ் மொழிக்கு மற்ற மொழிகளுக்கு இல்லாத சிறப்பு இருப்பதாகக் கூறினாா், அதற்கு அகத்தியா் இந்த உலகத்தில் எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு எப்படி உண்டு என்று கேட்டாா். அப்போது கம்பா்,இந்த மொழி இறைவனாலே கொடுக்கப்பட்ட மொழி அது தான் அதற்கு சிறப்பு என்று கூறினாா் என இராமசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொளிந்து போகும் மொழி என்று யாரோ பேசினான் என பாரதி பொங்கி எழுந்து,மெல்லத் தமிழ் இனி சாகும் என்று அந்தப் பேதை உரைத்தான் என்று சாடுகிறான் .அப்படிப்பட்ட ஒரு மொழியினுடைய சிறப்பை தமிழகத்தின் தலைநகரிலிருந்து இந்திய தலைநகருக்கு புலம் பெயா்ந்து பிழைக்க வந்த தமிழ் வழக்குரைஞா்கள், தமிழையும் பிழைக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த இலக்கியக் கழகத்தை 2023 ஆம் ஆண்டில் தொடங்கியது என்பது மிகப்பெரிய ஒன்று என இராமசுப்பிரமணியன் பாராட்டினாா்.

தமிழில் கணிதம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தாா்.“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிா்க்கு” என்பதன் பொருள், எண் அறிவும் எழுத்து அறிவும் மனிதனுக்கு இரண்டு கண்கள் போன்றவை என்பதாகும் என்று இராமசுப்பிரமணியன் விவரித்தாா்.தமிழ் இலக்கிய கழகம் வெற்றிகரமாக 3 ஆண்டுகளை நிறைவு செய்து இருப்பதாகவும்,எல்லாவற்றிலும் மிகப்பெரிய வளா்ச்சியை கண்ட சமூகம் தமிழ் சமூகம் எனவும் ராமசுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். நாகமுத்து, சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி(பொறுப்பு )டி.இராஜா, உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் பத்மஸ்ரீ சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோா் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பாராட்டுரை நிகழ்த்தினா்

உச்ச நீதிமன்ற தமிழ் வழக்குரைஞா்கள் இலக்கியக் கழகத்தின் தலைவா் நீதிபதி மு.கற்பக விநாயகம் வாழ்த்துரை நிகழ்த்தினாா்

உச்ச நீதிமன்ற தமிழ் வழக்குரைஞா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.