FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!

ஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு...

13 வினாடிகள் முன்பு
அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் - ANI
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜமுக்கு எதிராக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகாரைத் தொடர்ந்து, அவர் மீது தில்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

மணிப்பூரில் உள்ள உள் மணிப்பூா் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகப் பதவி வகிப்பவா் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம். இவா் புது தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினாா்.

இவா் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் 11 மாணவிகள் தெரிவித்த புகார் அளித்தனர்.

Advertisement

Advertisement

இந்த புகார்களின் அடிப்படையில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்நிலைக் குழு நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் அங்கோம்சா பிமோல் அகோய்ஜாமை பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பணிகளிலிருந்தும் உடனடியாகப் பணிநீக்கம் செய்தது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், தில்லி வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில் அங்கோம்சா பிமோல் அகோய்ஜமுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிஎன்எஸ் பிரிவுகள் 75, 75(1)(i), 75(1)(iv) மற்றும் 79-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவிகளின் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை தில்லி காவல்துறையும் தொடங்கியுள்ளது.

summary

Sexual harassment allegation by JNU female students! FIR registered against Congress MP!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments