FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சொந்த நாட்டில் தேசிய கொடியை அசைப்பது குற்றமா? கேஜரிவால் கேள்வி?

சிஜேபி தலைவர்களின் கைது குறித்து காவல் துறையின் நடவடிக்கையை கேள்வி எழுப்பும் ஆம் ஆத்மி...

25 வினாடிகள் முன்பு
அரவிந்த் கேஜரிவால் - ஏஎன்ஐ
பகிர்:

கரப்பான் ஜனதா கட்சித் தலைவர்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கையை முற்றிலும் தவறானது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்தார்.

கரப்பான்பூச்சி தலைவர்களான சௌரவ் தாஸ், அஷுஜோஸ் ரங்கா, ஷிண்டே ஆகியோர் கரப்பான்பூச்சி கட்சியினர் பிற உறுப்பினர்களுடன் இணைந்து, தடை உத்தரவுகளை மீறி கடந்த செவ்வாய்க்கிழமை ஜந்தர் மந்தர் பகுதிக்குள் நுழைந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். வாக்காளர் பட்டியலைச் சிறப்புத் தீவிர மறு ஆய்வு செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, அவர் பதவி விலக வேண்டும் என்று இக்குழு வலியுறுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ஆம் ஆத்மி தலைவர் கேஜரிவால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சொந்த நாட்டில் நமது தேசியக் கொடியை அசைப்பது குற்றமா? கரப்பான் ஜனதா கட்சித் தலைவர்கள் மீதான காவல் துறையின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தில்லி காவல் துறையின் தகவலின்படி, சிஜேபி தலைவர்களும் குழுவின் 11 உறுப்பினர்களும் தனியார் வளாகம் ஒன்றின் வழியாக அத்துமீறி நுழைந்து ஜந்தர் மந்தரை அடைந்தனர். காவல்துறை ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

கன்னாட் பிளேஸ் மற்றும் நாடாளுமன்ற தெரு காவல் நிலையங்களில் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இவ்வழக்குகளில் அமைதி காப்பதற்கான பிணைப் பத்திர விதிமுறைகளை மீறியதாகவும், போராட்டம் நடத்துவதற்கான இடமாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தஸ்தை இழந்த 'ஜந்தர் மந்தர்' பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், மூவர் கைது செய்யப்பட்டு புதன்கிழமை ஐந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று காவல் துறை தெரிவித்தது.

அவர்களுடன் இருந்த அஜிங்க்யா ஷிண்டே, ஆறு மாதங்களுக்கு அமைதி மற்றும் நன்னடத்தையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு, தனிப்பட்ட பிணை மற்றும் ரூ. 5,000 மதிப்பிலான ஜாமீன் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments