FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை வரவேற்கிறோம்! அண்ணாமலை

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது நடவடிக்கையை வரவேற்பதாக அண்ணாமலை பதிவு...

அண்ணாமலை / அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்
பகிர்:

முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"பள்ளிக்கல்வித் துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

Advertisement

Advertisement

கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் திமுக ஃபைல்கள் (DMK Files) வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.

அன்பில் மகேஸ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை.

நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

We welcome the arrest of Anbil Mahesh: Annamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments