FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்! கைதான பிறகு அன்பில் மகேஸ் பேட்டி!

காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அன்பில் மகேஸ் பேட்டியளித்துள்ளது குறித்து...

15 வினாடிகள் முன்பு
அன்பில் மகேஸ் - எக்ஸ்
பகிர்:

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு செய்தியாளர்களுடன் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் அன்பில் மகேஸை காவல் துறையினர் இன்று மாலை கைது செய்தனர்.

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்பில் மகேஸ் பேசியதாவது:

''என் தரப்பில் கோரப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளேன். சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்'' எனக் குறிப்பிட்டார்.

summary

I will face the case legally! Anbil Mahesh’s statement following his arrest!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments