இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் துரோகி தீப்கே! - பாஜக தாக்கு!
சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் துரோகி என பாஜக விமர்சித்துள்ளது குறித்து...
கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, இந்தியாவில் வாழ்ந்துகொண்டே இந்தியாவை பலவீனப்படுத்த முயற்சிக்கும் துரோகி என பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
எஸ்ஐஆர் பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பாதுகாக்க, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களையும், எதிர்க்கட்சியினரையும் மத்திய அரசு கைது செய்து வருவதாக, அபிஜீத் தீப்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவில் வாழ்ந்துகொண்டே இந்தியாவுக்கு எதிரான செயல்களில் அபிஜீத் தீப்கே ஈடுபடுவதாகவும், அவர் ஒரு துரோகி எனவும் பாஜக செய்தித்தொடர்பாளர் கௌரவ் பாட்டியா கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி, இன்று (அக். 15) செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
“சற்றுமுன்பு, ஒரு அராஜகவாதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அவர் ஒரு தேசவிரோதி மற்றும் துரோகியும் கூட. இந்திய மண்ணில் வாழ்ந்துகொண்டே அவர் மற்றவர்களைத் தூண்டிவிடுகிறார். இந்திய ராணுவமும், காவல் துறையினரும், வீதிகளில் இறங்கிப் போராட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார்.
அவரது உண்மையான, நச்சுத்தன்மை உடைய, அருவருப்பான இயல்பும், குழப்பத்தை உருவாக்கத் துடிக்கும் அவரது மனநிலையும் இன்று பொதுவெளியில் அம்பலமாகிவிட்டன. இது இந்திய அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் முற்றிலும் எதிரானது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிஜேபி நிர்வாகிகள் அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 16) மாலை 5 மணிக்கு தில்லியில் போராட்டம் நடத்தவுள்ளதாக தீப்கே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
BJP has sharply criticized Abhijit Dipke, labeling him a traitor who attempts to weaken India while living within the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.