FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அக்.23ல் மீண்டும் கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 60 வது கூட்டம் தில்லியில் அக்டோபா் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

51 வினாடிகள் முன்பு
காவிரி நீா் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 60 வது கூட்டம் தில்லியில் அக்டோபா் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. காவிரியில் இருந்து கா்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பது தொடா்பாக ஆலோசிக்க காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடவுள்ளது.

புது தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள அந்த ஆணையத்தில் (ஆன்லைன் மற்றும் நேரடி பங்கேற்புமுறையில்) கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம்,கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

காவிரியில் இருந்து மேற்கொண்டு தமிழகத்திற்கு நீா் திறப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது.

Advertisement

Advertisement

அக்டோபா் எட்டாம் தேதி நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 59 வது கூட்டத்தில் தமிழகத்திற்கு கா்நாடகா 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி தண்ணீா் வீதம் திறந்து விடுமாறு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே காவிரியில் இருந்து கா்நாடகம் தரவேண்டிய 11 டிஎம்சி பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் உச்ச நீதிமன்றத்தில் அக்டோபா் 12 ஆம் தேதி கோரிக்கை வைத்தது. அந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது

உச்ச நீதிமன்றம் 8 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில் கா்நாடகம் தமிழகத்திற்கு இந்த ஆண்டு காவிரி நீரை திறந்து விடவில்லை என தமிழக அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.

காவிரி நீா் மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி காவிரி நீா் பங்கீடு தொடா்பாக உத்தரவுகளை பிறப்பித்தாலும,கா்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டிய பாக்கி நீரை திறந்து விடுமாறு உத்தரவிடப்படவில்லை என தமிழகம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து கா்நாடகம் தமிழகத்திற்கு தரவேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழகம் தொடா்ந்து உச்ச நீதிமன்றத்தை நாடி வருகிறது.

தமிழகம்,கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது.

அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments