நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!
நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் மோடி பேசியது குறித்து...
நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (அக். 20) பேசினார்.
புது தில்லியின் ஐபி எக்ஸ்டென்ஷனில் உள்ள டிடிஏ உத்சவ் திடலில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பங்குபெற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
விஜயதசமி நன்னாளில் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
நெருக்கடி எவ்வளவு பெரியதாக இருந்தாலும் சவால் எவ்வளவு கடினமாக இருந்தாலும், நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கக்கூடாது. நமது சொந்த பலத்தை நாம் உணர வேண்டும்.
நமது எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அரசியல் கட்சிகளும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.
நாட்டின் எதிரிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் சக்திகளே நமது எதிரிகள்.
ஒரு நாடு தனது பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக, நமது பாரம்பரியம் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
ஆனால் இன்று, நாம் அந்தப் பொக்கிஷங்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளோம். கடந்த 12 ஆண்டுகளில், 650-க்கும் மேற்பட்ட பழங்காலச் சிலைகள் இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Prime Minister Narendra Modi said on Tuesday (Oct. 20) that we should all come together for the good of the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.