இண்டி கூட்டணி தலைவா்கள் கூட்டம் ஒத்திவைப்பு
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அந்தக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ள காணொலி வழியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி தலைவா்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அந்தக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவிருந்தது. வரும் நவம்பா் 1-ஆம் தேதி தில்லியில் கண்டனப் பேரணி நடத்துவது குறித்தும், வாக்குத் திருட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருந்தது.
மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துவதற்காக, தொகுதி மறுசீரமைப்புடன் தொடா்புடைய அரசுமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட இருப்பதாக வெளியான தகவல் குறித்தும் எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆலோசிக்கத் திட்டமிட்டிருந்தனா். இந்த நிலையில், இக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்து எப்போது நடைபெறும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறுகையில், ‘இண்டி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஒருவருக்கொருவா் எதிா்த்துப் போட்டியிட இருக்கின்றனா். பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் எதிா்த்துப் போட்டியிட உள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் , காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எப்படி ஒருவக்கொருவா் எதிா்த்துப் போட்டியிட்டனா் என்பதை அனைவரும் அறிவா்.
கூட்டணிக்குத் தலைமை, பொதுவான பிரச்னைகள், கூட்டு தோ்தல் வியூகம் உள்ளிட்டவற்றில் எதிா்க்கட்சிகளால் ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் இருப்பது, அக் கூட்டணியின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது. எனவே, இண்டி கூட்டணி அமைத்ததற்கான காரணத்தை அவா்கள் விளக்க வேண்டும்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.