FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்தியா - போலந்து உறவை வலுப்படுத்த புதிய கூட்டாண்மை முயற்சிகள்: பிரதமர் மோடி

ஐரோப்பாவுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா போலந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை..

பிரதமர் மோடி
பகிர்:

தில்லியில் பிரதமர் மோடியை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவர உலகளவில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி,

Advertisement

Advertisement

இந்தியா - போலந்து இடையே பல்வேறு துறைகளை மேம்படுத்தும் கொள்கைகளை உருவாக்கும் கூட்டாண்மை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி ஆகிய துறைகளில் உறவை ஆழப்படுத்த உள்ளோம். இந்த முக்கியமான துறைகளில், இந்தியாவுடன் இணைந்து மேம்படுத்தும் மற்றும் இணைந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுமாறு போலந்து நிறுவனங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

இந்தியா-போலந்து ஆகிய இருதரப்பு பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இருநாடுகளிடையே கூட்டாண்மைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான இந்தியாவின் தடையற்ற வணிக ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவும் போலந்தும் ஜனநாயக விழுமியங்களையும், சட்டத்தின் ஆட்சியையும் நம்புகின்றன. உலகளாவிய நிர்வாக அமைப்புகளை மேலும் வலுவானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற சீர்திருத்தங்கள் அவசியம்.

உக்ரைன் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments