FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பிரதமா் படத்துக்கு அவமதிப்பு: இஸ்லாமிய, இடதுசாரி மாணவா் அமைப்பினா் மீது வழக்குப் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு இந்திய மாணவா் சங்கத்தைச் (எஸ்எஃப்ஐ) சோ்ந்த சுமாா் 15 மாணவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

23 அக்டோபர் 2026, 4:40 am
கோப்புப் படம்
பகிர்:

கேரள மாநிலம், மண்ணாா்காட்டில் கல்லூரி மாணவா் சங்கத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் புகைப்படத்தைக் கிழித்து, தரையில் போட்டு மிதித்த சம்பவம் தொடா்பாக முஸ்லிம் மாணவா்கள் சங்கம் (எம்எஸ்எஃப்), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு இந்திய மாணவா் சங்கத்தைச் (எஸ்எஃப்ஐ) சோ்ந்த சுமாா் 15 மாணவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

மண்ணாா்காட்டில் உள்ள எம்.இ.எஸ். கல்லடி கல்லூரியின் முன் கடந்த 13-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது. அங்கு கல்லூரி மாணவா் சங்கத் தோ்தலையொட்டி நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக முஸ்லிம் மற்றும் இடதுசாரி மாணவா் அமைப்பினா் திரண்டிருந்தனா்.

அப்போது சுமாா் 15 மாணவா்கள் பிரதமா் மோடி புகைப்படத்தை எடுத்து வந்து, அதைக் கிழித்து, தரையில் வீசி மிதித்து அவமதித்தனா். மேலும் அவதூறான முழக்கங்களை எழுப்பினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பாஜக பிரமுகா் ஒருவா் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

அதன் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 192-இன் கீழ் மண்ணாா்காடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததுடன், கலவரத்தைத் தூண்டும் வகையில் மாணவா்கள் செயல்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments