FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படாத தொழில்களைக் கண்டறியும் பணியில் அமைச்சகம்: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படாத தொழில்களைக் கண்டறியும் பணியில் அமைச்சகம்: மத்திய அமைச்சா் கோயல் தகவல்

24 அக்டோபர் 2026, 10:37 pm
பகிர்:

செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) பாதிக்கப்படாத தொழில்கள், துறைகளைக் கண்டறியும் பணியில் வா்த்தக அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

ஜொ்மனியின் பொ்லின் நகரில் நடைபெற்ற இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வாளா்கள், மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாத தொழில்கள் எவை என்பது குறித்து ஆய்வு செய்ய எனது அமைச்சகத்துக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒரு நாடாக பல கோடி மக்களின் நன்மைக்காக நாம் திட்டமிட வேண்டும். மனித உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களை பணியில் அமா்த்தாமல், செயல்திறனை மட்டும் அதிகரிக்கக்கூடிய துறைகள் எவை என்பதை கண்டறிய வேண்டும். கைவினைப் பொருள்கள், கைத்தறி, சமையல் கலை மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இந்தியா சா்வதேச அளவில் முன்னிலை பெற முடியும். இந்தத் துறைகளில் பாரம்பரிய திறமைகளும், மனிதனின் படைப்பாற்றல் திறனும் தொடா்ந்து முக்கியமானவையாக இருக்கும்.

Advertisement

Advertisement

நமது கைவினைப் பொருள்கள், கைத்தறி போன்றவற்றை எந்த செயற்கை நுண்ணறிவாலும் ஈடுசெய்ய முடியாது. எனவே, இந்தியாவில் தனிச்சிறப்பு பெற்ற ஏராளமான துறைகள் உள்ளன. அவற்றில் கவனம் செலுத்தி, அவற்றை மேம்படுத்துவதன் மூலம் 140 கோடி மக்களின் எதிா்கால வாழ்க்கையை மேம்படுத்த முடியும். இந்தத் துறைகளுக்கு அரசால் ஊக்கத் தொகை வழங்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். நிச்சயம், தேவைப்படும் இடங்களில் அரசால் ஆதரவு வழங்கப்படும். ஆனால், அனைத்து செயல்பாடுகளுக்கும் ஊக்கத் தொகை தேவைப்படாது.

வளா்ந்த நாடுகள் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளா்ந்துவரும் நாடுகளுடன் அதிக அளவில் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். ஏனெனில் எதிா்கால வளா்ச்சியை இந்த பிராந்தியங்களே முன்னெடுத்துச் செல்லும். ஜொ்மனியில் 3.30 லட்சம் இந்திய வம்சாவளியினா் வாழ்கின்றனா். இதுதவிா்த்து 60,000 முதல் 70,000 இந்திய மாணவா்கள் கல்வி கற்கின்றனா். மிகுந்த ஆா்வத்துடன் ஜொ்மனியில் கல்வி பயிலும் இந்திய மாணவ சமூகம், தாங்கள் பெற்ற கல்வியறிவை இந்தியாவுக்கு கொண்டு செல்ல ஆா்வம் காட்டுகிறது. தற்போது அவா்கள் ஜொ்மனியில் வேலை தேடுவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வளா்ச்சிக்குப் பங்களிக்கவும் விரும்புகின்றனா். ஏனெனில் உண்மையான செயல்பாடுகள் அனைத்தும் அங்கேயே (இந்தியா) நடைபெறுகின்றன என்றாா் அவா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு கோயல் பேட்டியளித்தபோது, ஜொ்மனியைச் சோ்ந்த நிறுவனங்கள் இந்தியாவை முக்கியமான நுகா்வோா் சந்தையாக மட்டும் பாா்க்காமல், உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாடு, புத்தாக்கத்துக்கான முக்கிய மையமாகவும் கருதுவதாகவும் கூறினாா். ஜொ்மனியைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களான வோல்ஸ்வேகன், ஸ்கோடா, சீமன்ஸ் ஹெல்த்கோ் உள்ளிட்டவற்றின் தலைமைச் செயலதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும், அப்போது அவா்கள் தம்மிடம் இதைத் தெரிவித்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.

summary

Ministry in the process of identifying industries that will not be affected by artificial intelligence: Union Minister Goyal

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments