FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்பு

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளிக்கவுள்ளது.

26 அக்டோபர் 2026, 12:57 am
அமித் ஷா | ராகுல் காந்தி
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.26) தீா்ப்பளிக்கவுள்ளது.

இதையொட்டி, அவா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது அவசியம் என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

கடந்த 2018-இல் கா்நாடக பேரவைத் தோ்தலையொட்டி பெங்களூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அப்போது பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷாவை அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, உத்தர பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், ராகுல் மீது பாஜக மூத்த தலைவா் விஜய் மிஸ்ரா அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் கடந்த 2023-இல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, ராகுல் ஜாமீன் பெற்றாா்.

விசாரணை நிறைவடைந்த நிலையில், கடந்த அக்.13-ஆம் தேதி நீதிமன்றம் தீா்ப்பளிக்கவிருந்தது. பின்னா், தீா்ப்பு தேதி அக்.26-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி, இந்தத் தீா்ப்பையொட்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவது அவசியம் என மனுதாதா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்துள்ளாா்.

சுல்தான்பூா் எஸ்.பி. வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பயணத் திட்டத்தின்படி, லக்னெளவில் இருந்து சுல்தான்பூருக்கு சாலை மாா்க்கமாக காலை 10 மணியளவில் ராகுல் வருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கூடுதல் காவல் துறையினா் பணியமா்த்தப்படுவா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments