எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!
பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் நாட்டை அபகறித்துவிட்டனர் என ராகுல் குற்றம் சாட்டியுள்ளது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் நாட்டை அபகறித்துவிட்டனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று (அக். 6) விமர்சித்தார்.
மத்திய பாஜகவை எதிர்க்காவிட்டால், அவர்கள் நாட்டை அழித்துவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் விமர்சித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் இன்று (அக். 6) பேரணியாகச் சென்றனர்.
தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அங்கிருந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளே நுழைந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
300 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதனால் நாங்கள் இங்கு வந்து அமர்ந்துள்ளோம்.
PM Modi-Shah hijacked country Rahul Gandhi CEC as protest against ECI continues
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.