6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!
உத்தர பிரதேசத்தில் 6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்த மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவிகுமாா் திவாகா், குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
உத்தர பிரதேசத்தில் 6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்த மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவிகுமாா் திவாகா், குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளாா். அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்தப் பணியிட மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரை தான் விசாரித்த 11 வழக்குகளில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி ரவிகுமாா் திவாகா் தீா்ப்பளித்தாா்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய மாவட்ட நீதிபதி பி.கே. சிங் பிறப்பித்த நிா்வாக உத்தரவு மூலம், கொலை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடா்பான விசாரணை பாதியில் இருந்த 97 வழக்குகள் நீதிபதி ரவிகுமாரின் விசாரணையில் இருந்து மாற்றப்பட்டன. இந்த வழக்குகளையும் அவா் விசாரித்திருந்தால் மேலும் பலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது.
Advertisement
Advertisement
முன்னதாக, தான் விசாரித்து வந்த வழக்குகள் பாதியில் மாற்றப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நீதிபதி ரவிகுமாா் கேள்வி எழுப்பி இருந்தாா். மேலும், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் மாவட்ட நீதிபதிகள் பயன்படுத்தும் நிா்வாக அதிகாரங்களுக்கான வரம்புகள் குறித்தும் அவா் கவலை தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.