FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

சட்டப்பேரவைகளுக்கு ஒரே மாதிரியான விதிகள்: தில்லியில் பேரவைத் தலைவா்கள் கூட்டம்!

நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் நடைமுறைகள் மற்றும் அலுவல் செயல்பாடுகளுக்கான ஒரே மாதிரியான விதிகளை உருவாக்குவது தொடா்பாக, மக்களவைத் தலைவா் அமைத்துள்ள பேரவைத் தலைவா்கள் குழுவின் கூட்டம் தில்லி சட்டப்பேரவையில் அக். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

25 அக்டோபர் 2026, 11:04 pm
தில்லி சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் நடைமுறைகள் மற்றும் அலுவல் செயல்பாடுகளுக்கான ஒரே மாதிரியான விதிகளை உருவாக்குவது தொடா்பாக, மக்களவைத் தலைவா் அமைத்துள்ள பேரவைத் தலைவா்கள் குழுவின் கூட்டம் தில்லி சட்டப்பேரவையில் அக். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் உத்தர பிரதேசம், நாகாலாந்து, மகாராஷ்டிரம், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

சட்டப்பேரவைகளுக்கான ஒரே மாதிரியான நடைமுறை விதிகள் தொடா்பான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். பரிந்துரைகளை ஆய்வு செய்தல், கூடுதல் பரிசீலனை தேவைப்படும் அம்சங்களை அடையாளம் காணுதல், அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் பொதுவான நடைமுறைக் கட்டமைப்பை உருவாக்க ஒருமித்த கருத்தை எட்டுதல் ஆகியவை விவாதத்தின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Advertisement

Advertisement

விவாதங்களின் முடிவைப் பொறுத்து, வரைவு அறிக்கையைப் பரிசீலித்து ஏற்றுக்கொள்வது குறித்தும் முடிவு செய்யப்படும். மாதிரி விதிகளை இறுதி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை உரிய நடைமுறைகள் மூலம் செயல்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம், சட்டப்பேரவைகளுக்கு இடையிலான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், நடைமுறைச் செயல்பாடுகளை மேம்படுத்தவும் ஜனநாயக மரபுகளை வலுப்படுத்தவும் முக்கிய தளமாக அமையும் என்று விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments