நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.43.46 லட்சம் கோடியாக உயர்வு
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறித்து...
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ. 43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 13.5% வளர்ச்சி அடைந்து ரூ.43.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிக அதிகபட்ச அளவாகும். அதே நேரம் கையிருப்புப் பணம் 10.3% அதிகரித்து ரூ.53.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு அதிகரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இணையவழி பணப் பரிவா்த்தனையை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் மேற்கொண்டது. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டு புதிய ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
எனினும், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிலை அறிக்கையின்படி, அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பணப்புழக்க உட்செலுத்தல்களின் ஆதரவுடன், நாட்டில் புழக்கத்தில் உள்ள நாணயம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து இணையவழி பணப் பரிவா்த்தனைகளை அதிகரிப்பதே மத்திய அரசின் இலக்கு. இதன்மூலம் கருப்பு பணப் புழக்கமும் ஒழியும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும் ஆா்பிஐ-யும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.
இணையவழி பணப் பரிவா்த்தனை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்தாலும், ரொக்கப் பணத்தின் மீதான பயன்பாடு மற்றும் தேவை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நடப்பு ஆண்டில் இத்தகைய அசுர அளவிலான பணப்புழக்க வளர்ச்சிக்கு, அந்நியச் செலாவணி சந்தையில் ஊக வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைள், இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் இருந்து அதிகயளவில் திரட்டிய வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட ரூபாய் மாற்ற நடவடிக்கைகளும் மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்தியுள்ளதாகவும், அதே நேரத்தில் கொள்கை வகுப்பாளர்கள் பணப்புழக்கம், பணவீக்கம் மற்றும் வெளிப்புற அபாயங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
India's currency in circulation grew 13.5% year-on-year to ₹43.46 trillion on Oct 15, marking its strongest growth in five years
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.