FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பொய் விளம்பரம்: பிரிட்டானியாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தங்கள் நிறுவனத்தின் ‘பிரட்’ 100% முழுக் கோதுமையால் தயாரிக்கப்பட்டது என்று பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து...

26 அக்டோபர் 2026, 10:28 pm
பகிர்:

தங்கள் நிறுவனத்தின் ‘பிரட்’ 100 சதவீதம் முழுக் கோதுமையால் தயாரிக்கப்பட்டது என்று பொய்யாக விளம்பரம் செய்த குற்றச்சாட்டில் பிரிட்டானியா நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

அந்த நிறுவன தயாரிப்பு பிரட்டில் 62 சதவீதம் அளவுக்கே கோதுமை இருந்த நிலையில், விளம்பரம் மூலம் மக்கள் மத்தியில் பொருள் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. அப்போது பிரிட்டானியா விளம்பரப்படுத்தும் முழுக் கோதுமை பிரட்டில் 62 சதவீதம் கோதுமை, மீதமுள்ள 38 சதவீதத்தில் அரிசித் தவிடு உள்ளிட்ட பொருள்கள் சோ்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, நுகா்வோருக்கு தவறான தகவலைத் தெரிவித்து பொருள்களை விற்பனை செய்தது, நியாயமற்ற வா்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.

மேலும், இது தொடா்பான விளம்பரங்களை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என எதிலும் வெளியிடக் கூடாது. ஏற்கெனவே சமூக ஊடகங்கள் உள்ளிட்டவற்றில் விளம்பரம் செய்து வந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments