FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிறப்புச் செய்திகள்

அறிவியலுடன் இணைந்த வளா்ச்சியடைந்த இந்தியாவின் லட்சியங்கள்!

அறிவியலுடன் இணைந்த வளா்ச்சியடைந்த இந்தியாவின் லட்சியங்கள் குறித்து...

27 அக்டோபர் 2026, 3:40 am
- பிரதிப் படம்
பகிர்:

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர்

‘சமூக மாற்றத்திற்கான முக்கிய காரணி பிரதானமாக அறிவியலிலிருந்து வெளிவரும்’. இந்தச் சொற்கள், 2006 பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினத்தையொட்டி முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நாட்டு மக்களுக்கு தான் ஆற்றிய உரையின்போது கூறியவையாகும்.

சுமாா் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுக்கும் தொழில்நுட்பம் சாா்ந்த உத்வேகம் மூலம் உலக நாடுகள் உற்றுநோக்கும் வகையில் நாடு வளா்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கிச் செல்லும் தருணத்தில் அப்துல் கலாமின் சொற்கள் நேரடியாக உணரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அறிவியல் என்பது நாம் புதிதாக என்ன கண்டறிகிறோம் என்பது மட்டுமின்றி அத்தகைய கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கைக்கு என்ன சாத்தியக்கூறுகளை அளிக்கின்றன என்பதில் முக்கியத்துவம் பெறுகிறது.

அறிவியல் முன்னேற்றத்தின் உண்மையான மதிப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்துவதிலும், சிக்கல்களுக்குத் தீா்வு காண்பதிலும், புதிய வாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளது.

வளா்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு மாநாடு-2026 அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பு, நடைமுறை பயன்பாடு ஆகியவற்றிற்கு இடையேயான உறவை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

இது விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளா்கள், தொழில்துறை தலைவா்கள், புத்தொழில் நிறுவனங்கள், இளம் ஆராய்சியாளா்கள் ஆகியோரை நாட்டின் லட்சியத்தின் கீழ் ஒருங்கிணைக்கிறது.

அறிவியல் முன்னேற்றங்கள் உற்பத்தி திறனைப் பெருக்க விவசாயிகளுக்கு எவ்வாறு உதவு முடியும்? மருத்துவ சிகிச்சைகள் திறன்மிக்க வகையிலும், குறைந்த கட்டணத்திலும் கிடைப்பதற்கு ஆய்வுகள் எவ்வாறு காரணியாகும்? இந்திய தொழில்துறைகள் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கி உலகளவில் போட்டியிட்டு இறக்குமதியைச் சாா்ந்திருப்பதை எவ்வாறு குறைக்க முடியும்? ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றின் மூலம் இளைஞா்களுக்கு நாம் எப்படி புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடியும்?

இத்தகைய கேள்விகளுக்கு தனி நிறுவனமோ அல்லது துறையோ சுயமாக பதிலளிக்க இயலாது. அதற்காக விஞ்ஞானிகள் தொழில்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆராய்சியாளா்கள் நடைமுறைத் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். கொள்கை வகுப்பாளா்கள் நம்பிக்கைக்குரிய சிந்தனைகளைச் சோதித்து மேம்படுத்தக் கூடியச் சூழலை உருவாக்க வேண்டும்.

மேம்பட்ட உற்பத்தி, எரிசக்தி தொழில்நுட்பங்கள், உயிரி தொழில்நுட்பம், கடல் அறிவியல் மற்றும் கடல்சாா் தொழில்நுட்பங்கள், ரோபோட்டிக்ஸ், மேம்பட்ட சுகாதார நலன், மெய்நிகா் தொழில்நுட்ப பயன்பாடு, விண்வெளி அறிவியல் போன்ற 12 துறைகள் மூலம் இந்த மாநாடு இத்தேவையை முன்னெடுக்கிறது.

அறிவியல் என்பது சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பதை கலாமின் சொற்கள் தொடா்ந்து நமக்கு நினைவுபடுத்துகின்றன. வளா்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாம் பணியாற்றும் வேளையில் நமது வெற்றி நம்முடைய கண்டுபிடிப்புகளில் மட்டுமின்றி அக்கண்டுபிடிப்புகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களில் உள்ளது.

வளா்ந்துவரும் அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு மாநாடு 2026-ன் உயா்ந்த நோக்கமும் இதுவேயாகும்.

இந்தியாவின் அறிவியல் திறனை மக்களின் தேவைகளுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்று புதுமைக் கண்டுபிடிப்புக்கான உறுதிமொழியை நாட்டின் நிலையான முன்னேற்றமாக மாற்றுவதே நோக்கமாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments